கிருஷ்ண பக்தியானது ஆத்மாவாகிய நாம் அனைவருக்கும் இயற்கையானது. ஆனால் அது நமக்கு புலப்படவில்லையே. உணர இயலவில்லையே? ஏன். நம்மால் அவனது அன்பையும் அருளையும் பெற்றிட இயலுமா?
கிருஷ்ணரின் மீதான அன்பு:
“கிருஷ்ணரே எனது வாழ்க்கை,” என்னும் திடமான நிலைக்கு நாம் வர வேண்டும். இந்த உணர்வின் மிகவுயர்ந்த பக்குவநிலையானது விருந்தாவனத்தில், குறிப்பாக கோபியர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
விருந்தாவனத்திலுள்ள அனைவரும் கிருஷ்ணரிடம் அன்பும் பற்றும் கொண்டிருந்தனர்– மரங்கள், செடிகள், ஏன் மண் துகள்கள் கூட கிருஷ்ணரிடம் அன்பு கொண்டுள்ளன. அத்தகைய மிகவுயர்ந்த நிலையினை திடீரென்று உடனே அடைய இயலாது.
அதற்கு அவனிடம் இடைவிடாத அன்பு செய்ய வேண்டும், அவனிடம் மனமானது லயித்து இருக்க வேண்டும். கிருஷ்ணரைப் பற்றி ஒருபோதும் கேட்டிராதவரும் பக்தி பற்றி அறியாமல் இருந்தவர்களுமான மக்கள் உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியை ஏற்று கொண்டு அவனிடம் அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர்,
மேலும் கிருஷ்ணரின் மீதான அவர்களின் அன்பு படிப்படியாக அதிகரித்து வரும். அஃது இயற்கையான ஆத்மாவின் ஸ்வரூபமாகும்.
இது எவ்வாறு இயற்கையானதாக அமைக்கிறது?
இவ்வுலக உயிர்களின் இதயங்களில் கிருஷ்ணன் வியாபித்துள்ளான். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாலும் அவரது புகழைப் பாடுவதாலும் இதயம் பரிசுத்தமாகிறது.
அவ்வாறு தூய்மையடையும்போது, அன்பானது இயற்கையாகவே வெளிப்படுகிறது. ஆத்மாவான நாம் அனைவரும் எவ்வாறு நித்தியமானவர்கள்.
அதுபோலவே கிருஷ்ணருக்காக அவர் மீது கொண்டுள்ள பக்தியும் நித்தியமானதாகும். அது தற்போது அறியாமையால் (அவித்யாவினால்) மூடப்பட்டுள்ளது.
நாம் கிருஷ்ணரை மறந்து வேறொன்றில் மனம் செல்லும் போது, அந்த நிலை அவித்யா எனப்படும். கிருஷ்ணரே எல்லாம் என்பதை ஏற்றுக்கொண்டு அதிலேயே மனம் ஒன்றியிருந்தால், அந்த நிலை வித்யா. அவித்யா என்பது இருளையும் வித்யா என்பது ஒளியையும் குறிக்கும்.
தமஸி மா ஜ்யோதிர் கம, என வேதம் உரைக்கிறது
பொருள்: “அறியாமையின் இருளில் இருக்க வேண்டாம், கிருஷ்ண பக்தி எனும் ஒளிக்கு வாருங்கள்.
ஆகவே, அவித்யை எனும் கண்ட விஷயங்களில் மனத்தை அலைபாய விடாமல் கிருஷ்ணரை தியானித்து அவர் அருளை பெற்றிடுங்கள்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!!
Comments